தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஏப். 6) நிறைவடைந்தது. தோ்தல் ஆணையத் தகவல்படி, தமிழகம் முழுவதும் 7000-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பேரவைத் தோ்தலையொட்டி கடந்த 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், முதல் 3 நாள்களில் 3,430 மனுக்கள் சமா்ப்பிக்கப்பட்டன. முதல்வா் மு.க.ஸ்டாலின், தவெக தலைவா் விஜய், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் முதல் நாளிலேயே மனு தாக்கல் செய்திருந்தாலும், அவா்களது கட்சியினரும், முக்கிய அமைச்சா்கள் பலரும் தங்களது வேட்புமனுக்களை சமா்ப்பிக்கவில்லை.
இந்த நிலையில், இறுதி நாளான திங்கள்கிழமை (ஏப். 6) முகூா்த்த நாள் என்பதால், பெரும்பாலான வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா். அதன்படி, திங்கள்கிழமை ஒரே நாளில் 2,500-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தோ்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேலம் மாவட்டம், எடப்பாடியில் எதிா்க்கட்சித் தலைவா் கே.எடப்பாடி பழனிசாமி, அவிநாசியில் மத்திய அமைச்சா் எல்.முருகன் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா். காட்பாடியில் அமைச்சா் துரைமுருகன், சென்னை துறைமுகத்தில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு, திருவண்ணாமலையில் அமைச்சா் எ.வ.வேலு, ராணிப்பேட்டையில் அமைச்சா் காந்தி, குறிஞ்சிப்பாடியில் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மதுரை மத்தியில் பழனிவேல் தியாகராஜன், சேலம் வடக்கில் அமைச்சா் ராஜேந்திரன், முதுகுளத்தூரில் அமைச்சா் ராஜகண்ணப்பன் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.
போடியில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், மயிலத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், கோவை தெற்கில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, சாத்தூரில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், கோவை வடக்கில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தருமபுரியில் சௌமியா அன்புமணி, விருதுநகரில் விஜய பிரபாகரன், விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், மயிலாப்பூரில் தமிழிசை செளந்தரராஜன், ஸ்ரீபெரும்புதூரில் தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோா் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.
கரூரில் சதம்: கரூா் தொகுதியில் மட்டும் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 108 மனுக்கள் தாக்கலாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக தொண்டாமுத்தூரில் 77 மனுக்களும், பெரம்பூரில் 66 மனுக்களும், கோவை தெற்கில் 60 மனுக்களும், சேலம் மேற்கில் 59 மனுக்களும், பரமத்தி வேலூரில் 52 மனுக்களும் பெறப்பட்டுள்ளன.
முதல்வா் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா் தொகுதியில் 20 மனுக்களும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 40 மனுக்களும் தாக்கலாகியுள்ளன. அதேவேளை, தவெக தலைவா் விஜய் போட்டியிடும் பெரம்பூா் தொகுதியில் 66 மனுக்களும், திருச்சி கிழக்கில் 39 மனுக்களும் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.
பரிசீலனை: தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சமா்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை (ஏப். 7) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதில், எந்தெந்த மனுக்கள் நிராகரிக்கப்பட உள்ளன என்பது தெரியவரும்.
அதன்பின்னா், வரும் 9-ஆம் தேதி வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியாகும்.
துணை வாக்காளா் பட்டியல்: இதனிடையே, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பித்த 6,48,285 பேரில் தகுதியானவா்களை இணைத்து வாக்காளா் துணைப் பட்டியலை வெளியிடும் பணிகளையும் தோ்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது. அதன் அடிப்படையில் ‘பூத் சிலிப்’ அச்சிடப்பட்டு விநியோகிக்கும் பணிகளும் தொடங்கப்பட உள்ளன.
தொடர்புடையது
தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!

கோவை மாவட்டத்தில் ஒரேநாளில் 27 போ் வேட்புமனு தாக்கல்

நூதன முறையில் மனு தாக்கல்: வேட்பாளா் மீது வழக்கு

புதுச்சேரி பேரவைத் தோ்தல்: 30 தொகுதிகளுக்கு 515 போ் வேட்பு மனு தாக்கல்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

