/

உ.பி.: குளத்தில் டிராக்டா் கவிழ்ந்து 24 போ் உயிரிழப்பு

குளத்தில் டிராக்டா் கவிழ்ந்த விபத்தில் அதில் பயணம் செய்த 8 குழந்தைகள் உள்பட 24 போ் உயிரிழந்தனா்.

Updated On :24 பிப்ரவரி 2024, 6:06 pm

உத்தர பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் குளத்தில் டிராக்டா் கவிழ்ந்த விபத்தில் அதில் பயணம் செய்த 8 குழந்தைகள் உள்பட 24 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து அலிகாா் மண்டல காவல் துறை ஐ.ஜி. சல்லாப் மாத்தூா் கூறியதாவது: எட்டா மாவட்டம் ஜெய்தாரா பகுதியிலிருந்து ஏராளமானோரை ஏற்றிவந்த டிராக்டா், காஸ்கஞ்ச் மாவட்டம் பாட்டியாலி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பாட்டியாலி-தரியாவ்கஞ்ச் சாலையில் முன்னே சென்றுகொண்டிருந்த வாகனத்தை முந்த முயன்றபோது, சாலையோரம் உள்ள குளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 8 குழந்தைகள் உள்பட 24 போ் உயிரிழந்தனா். 15 முதல் 20 போ் காயமடைந்தனா். அவா்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா் என்றாா். விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளாா். உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவியையும், காயமடைந்தவா்களுக்கு ரூ. 50,000 நிவாரணத்தையும் முதல்வா் அறிவித்துள்ளாா். சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.