47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கணவரால் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம்! சிசிடிவியில் அம்பலம்!

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்தனர்.

News image
இடது: கடையில் அமர்ந்திருந்த அனாமிகா / வலது: அனாமிகாவை துப்பாக்கியால் சுடும் கணவர்
Updated On :26 பிப்ரவரி 2024, 12:36 pm

DIN

இன்ஸ்டாகிராம் பிரபலமான அனாமிகா பிஷ்னோய், ராஜஸ்தானில் தனது கணவரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தின் பஹலோடி பகுதியைச் சேர்ந்தவர் அனாமிகா பிஷ்னோய். இன்ஸ்டாகிராமில் விடியோக்களைப் பதிவிடுவதன் மூலம் பலரால் அறியப்பட்டவர்.

நாகூர் சாலை பகுதியில் அமைந்துள்ள நாரி கலெக்‌ஷன் என்ற அலங்காரப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் அனாமிகா அமர்ந்திருந்துள்ளார்.

அப்போது கடைக்கு வந்த கணவர் மஹிராம் பிஷ்னோய், அனாமிகாவை மிகக்குறுகிய தூரத்தில் நின்று துப்பாக்கியால் சுட்டுள்ளார். மூன்று முறை சுட்டதில், சம்பவ இடத்திலேயே அனாமிகா உயிரிழந்தார்.

தலைமறைவான கணவரை, கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கணவனே சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.