ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கொல்கத்தாவில் கரோனாவுக்கு 24 வயது இளைஞர் பலி!

மேற்கு வங்கத்தில் இந்தாண்டு கரோனாவுக்கு மூன்றாவது மரணம் இது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 பிப்ரவரி 2024, 7:46 am

DIN

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்து 24 வயதுள்ள இளைஞர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டையே உலுக்கிஎடுத்த கரோனா தொற்று தற்போது சற்று ஓய்ந்த நிலையில், கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் உயிரிழந்திருப்பது மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் இந்தாண்டு கரோனாவுக்கு மூன்றாவது மரணம் இது என்று சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இறந்தவர் ஆஷிஷ் ஹஸ்ரா என்று அடையாளம் காணப்பட்டவர், மூச்சுத் திணறல் காரணமாக தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மூளைக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது, பின்னர் கரோனா சோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் பெலியாகட்டா ஐடி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கிய நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் காலமானார்.

ஹஸ்ராவின் உடல் கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது, அதன் பிறகு திங்கள்கிழமை மாலை கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி அவரது இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

கடந்த ஜனவரியில் நகரத்தில் ஒருவரும், மற்றொன்று வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.