மொபைல் செயலிகளில் கடன்: உயிரைப் பறித்த விபரீதம்!

மொபைல் செயலிகளில் கடன்: உயிரைப் பறித்த விபரீதம்!

கடன் சுமையால் மாணவர் தற்கொலை: முகவர்களின் அழுத்தத்தில் உயிரிழப்பு!
Published on

ஹைதராபாத்: தெலங்கானாவைச் சேர்ந்த 20 வயது பொறியியல் மாணவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

மொபைல் செயலிகளில் பெற்ற கடனைத் திருப்பி செலுத்த இயலாத நிலையில் செயலிகளின் முகவர்கள் கொடுத்த அழுத்தத்தில் மாணவர் இந்த முடிவுக்கு சென்றதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பி.டெக் மூன்றாமாண்டு மாணவர் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

முதல்கட்ட விசாரணையில், மாணவர் மொபைல் கடன் செயலிகள் தவிர அவரது நண்பர்களிடமும் மற்ற மாணவர்களிடம் கடன் பெற்றுள்ளார். ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் இழந்ததாகவும் கடன் குறித்த மன அழுத்தத்தில் அவர் இருந்ததாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.

மாணவரின் தந்தை ரூ.3 லட்ச கடனைத் திருப்பி அளித்துள்ளார்.

கடன் அடைக்கப்பட்டபோதும் செயலிகளின் முகவர்கள் மாணவரின் குடும்பத்தினருக்கு தொடர் தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அதை தொடர்ந்து மாணவர் தற்கொலை செய்து இறந்துள்ளார்.

இது குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மொபைல் செயலிகளில் கடன்: உயிரைப் பறித்த விபரீதம்!
இவர்கள்தான் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள்!

X
Dinamani
www.dinamani.com