ஹிமாசல் எதிர்க்கட்சித் தலைவர் உள்பட 15 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்!

ஹிமாசல் பிரதேச அரசியல் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
ஹிமாச்சல் ஆளுநருடன் பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு
ஹிமாச்சல் ஆளுநருடன் பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு

ஹிமாசல் பிரதேசம் எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாகூர் உள்பட பாஜகவின் 15 எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சற்றுநேரத்துக்கு முன்னதாக காங்கிரஸின் முக்கியத் தலைவர் விக்ரமாதித்ய சிங் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருந்தார்.

ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்எல்ஏக்கள் இருந்தும், 25 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜகவுக்கு 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறியும், 3 சுயேச்சைகளும் வாக்களித்ததால் பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றார்.

ஹிமாச்சல் ஆளுநருடன் பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு
ஹிமாசல் அமைச்சர் விக்ரமாதித்ய சிங் ராஜிநாமா!

இது காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, ஹிமாசல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் குறித்தும், பாஜக எம்எல்ஏக்களை சட்டப்பேரவையில் கண்ணிய குறைவாக நடத்து குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநரை சந்தித்து இன்று காலை முறையிட்டிருந்தார்.

இந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவரின் அறையில் அத்துமீறி செயல்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாகூர் உள்பட 15 பாஜக எம்எல்ஏக்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com