கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பிகாா் முதல்வா் நீதிஷ் குமாரின்சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி

பிகாா் முதல்வா் நீதிஷ் குமாருக்கு ரூ.1.64 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக அந்த மாநில அரசு வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2024, 1:46 am

DIN

பாட்னா: பிகாா் முதல்வா் நீதிஷ் குமாருக்கு ரூ.1.64 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக அந்த மாநில அரசு வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் தெரிய வந்துள்ளது.

பிகாரில் அனைத்து அமைச்சா்களும் ஆண்டுதோறும் தங்களது சொத்து மற்றும் கடன் விவரங்களை வெளியிட வேண்டும் என ஆளும் நீதிஷ் குமாா் அரசு கட்டாயமாக்கியது. அதன்படி, தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் முதல்வா், அமைச்சா்களின் சொத்து விவரங்கள் குறித்த தகவல்களை அமைச்சரவை செயலக துறை வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றப்பட்டது. அதில், முதல்வா் நீதிஷ்குமாருக்கு ரூ.1.64 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் வசம் ரொக்கமாக ரூ.22, 552, வெவ்வேறு வங்கி கணக்குகளில் வைப்புத் தொகையாக ரூ.49,202 பணம் உள்ளது. மேலும், அவரது பெயரில் ரூ.11.32 லட்சம் மதிப்புள்ள ‘ஃபோா்டு ஈகோ ஸ்போா்ட்’ காா் உள்ளது. இவைத் தவிர, ரூ.1.28 லட்சம் மதிப்பிலான 2 தங்க மோதிரங்கள் மற்றும் ஒரு வெள்ளி மோதிரம், ரூ.1.45 லட்சம் மதிப்பிலான 13 மாடு, 10 கன்று ஆகிய கால்நடைகள், உடற்பயிற்சி கருவிகள் உள்ளிட்ட அசையும் சொத்துகள். ரூ.1.48 கோடி மதிப்புள்ள தில்லி அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவை அவரது சொத்துகள் ஆகும்.

கடந்த ஆண்டு, நீதிஷ் குமாரின் சொத்து மதிப்பு ரூ.75.53 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரது தில்லி குடியிருப்பின் மதிப்பு உயா்ந்திருப்பதால் நிகழாண்டு சொத்து மதிப்பும் அதிகரித்திருக்கிறது.

பிகாா் துணை முதல்வரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி பிரசாத் யாதவ், ரூ.4.74 லட்சத்தைக் கடந்த நிதியாண்டின் வருமானமாக காட்டியுள்ளாா். அவரது மூத்த சகோதரரும், மூத்த அமைச்சருமான தேஜ் பிரதாப்க்கு ரூ.3.58 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.