இந்தியாவில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 71 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் மிக பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்று வாட்ஸ்அப். இந்தியாவில் மட்டும் சுமார் 50 கோடி பேர் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ஐ மீறிய காரணத்திற்காக இந்தியாவில் மட்டும் 71 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகளுக்கு தடை விதித்துள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த நவம்பர் 1 முதல் 30 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 71,96,000 கணக்குகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் தடை செய்துள்ளது. இதில், 19,54,000 கணக்குகள் எவ்வித புகார்களும் பெறுவதற்கு முன்னதாகவே கொள்கை மீறல் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | யுபிஐ பணப் பரிவர்த்தனை: புதிய விதிமுறைகள் அமல்
கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 8,841 பணமோசடி புகார்களை வாட்ஸ்ஆப் நிறுவனத்திடம் பயனர்கள் பதிவு செய்துள்ளனர்.
வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பணமோசடி செய்யும் நடைமுறை அதிகரித்து வரும் சூழலில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது வாட்ஸ்ஆப் பேக்கப்பை கூகுள் டிரைவில் இலவசமாக பிரதி எடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்னை ஒன் செயலி பயனர்கள் கவனத்துக்கு..!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கல்பாக்கம் பாரதிய நாபிகியா வித்யுத் நிகாம் நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி!
உலை வாங்கு மிதி தோல் - கூடடைய விரையும் தனித்த குரல்!

30, 40களிலேயே மூட்டு வலியா? ஏன்? என்ன செய்ய வேண்டும்?
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

