கரோனா: கர்நாடகத்தில் ஒருவர் பலி; புதிதாக 148 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது
கரோனா: கர்நாடகத்தில் ஒருவர் பலி; புதிதாக 148 பேருக்கு கரோனா


பெங்களூரு (கர்நாடகம்): கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது என்று மத்தி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 148 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. 

புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டில் தொற்று பாதிப்பு 4,565 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 148 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,50,14,481 ஆக உள்ளது. அதே நேரத்தில் கர்நாடகத்தில் தொற்று பாதித்த ஒருவர் இறந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,33,366 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1 சதவிகிததமாக உள்ளது. கர்நாடகத்தில்  தொற்றுக்கு உயிரிழந்தவர் விஜயநகரைச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் 7305 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் தொற்று பாதிப்பு விகிதம் 2.02 சதவிகிதமாக உள்ளது.

செவ்வாய்க்கிழமை வரை கர்நாடகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,144 ஆகவும், இறப்பு விகிதம் 0.67 சதவிகிதமாக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 40,370 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.09 சதவிகிதமாக உள்ளது.

செவ்வாய்க்கிழமை 55 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1089 பேர் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து பெங்களூரு கிராமப்புறத்தில் சிகிச்சை பெறுவோரின் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 28 ஆகவும், பெங்களூரு நகர்ப்புறத்தில் இது 545 ஆகவும் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 199 பேருக்கு புதிய வகை (ஜெ.என்.1)கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக டிசம்பரில், மாநிலத்தில் பதிவான தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நிலைமையைச் சமாளிக்கவும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு  கர்நாடக அரசு அமைச்சரவை துணைக் குழுவை அமைத்துள்ளது.

இந்த குழுவில் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், அமைச்சர்கள் சரண் பிரகாஷ் பாட்டீல், எச்.சி.மகாதேவப்பா, எம்.சி.சுதாகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com