பசுபதிநாத் கோயிலில் ஜெய்சங்கர் வழிபாடு!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார். 
பசுபதிநாத் கோயிலில் ஜெய்சங்கர் வழிபாடு!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார். 

ஜெய்சங்கர் 2024ஆம் ஆண்டு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக வியாழக்கிழமை நேபாளம் வந்தடைந்தார். இன்று அதிகாலை பசுபதிநாத் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார். 

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 

இரு நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், இந்தியா-நேபாளம் சுமுக உறவுக்காகவும் பிரார்த்தனை செய்ததேன். 

காத்மாண்டுவின் கிழக்குப் புறநகரில் புனித நதியான பாகமதியின் கரையில் அமைந்துள்ள பசுபதிநாத் கோயில் நேபாளத்தில் மிகவும் புகழ்பெற்ற இந்துக் கோயிலாகும். 

முக்கிய சுற்றுலாத் தலமாக மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பசுபதிநாத்தை தரிசனம் செய்கின்றனர். 
இத்தலத்தில் சிவபெருமான் அவரது அவதாரத்தில் விலங்குகளின் பாதுகாவலரான பசுபதியாகத் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com