காதல் பரிசாக கிடைத்த ரூ.100 கோடி பங்களாவுக்கு சீல்!

தில்லியில் ரூ.100 கோடி மதிப்புள்ள சொகுசு வீட்டிற்கு காவல் துறையினர் சீல் வைத்துள்ளனர். 
காதல் பரிசாக கிடைத்த ரூ.100 கோடி பங்களாவுக்கு சீல்!

தில்லியில் ரூ.100 கோடி மதிப்புள்ள சொகுசு வீட்டிற்கு காவல் துறையினர் சீல் வைத்துள்ளனர். 

இந்த சொகுசு வீடு காஜல் ஜா என்ற பெண்ணிற்கு சொந்தமானது. அவரை வெளியேற்றிவிட்டு காவல் துறையினர் அந்த வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர். 

தில்லியில் 16 பேர் கொண்ட கும்பல் மூலம் முறைகேடாக கொள்முதல் செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்து வருபவர் ரவி கானா.

இவருக்கு சொந்தமான இடங்களில் காவல் துறையினர் நடத்திய சோதனைக்குப் பிறகு ரூ.200 கோடி மதிப்புள்ள வீடு, அலுவலகங்களுக்கு காவல் துறையினர் சீல் வைத்துள்ளனர். 

அதில், அவர் தனது காதலி காஜல் ஜாவுக்கு பரிசாக கொடுத்த சொகுசு வீடும் அடங்கும். 


இதையும் படிக்க : உத்தமவில்லனின் காதல்!

காஜல் ஜா என்பவர் யார்?

தில்லியில் கும்பல் மூலம் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்த ரவி கானாவிடம் வேலை கேட்டுச் சென்றவர் காஜல் ஜா. ஆனால், மிக விரைவிலேயே ரவியின் குழுவில் சேர்ந்து முக்கியப் பொறுப்புகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார். முறைகேடாக கொள்முதல் செய்யும் பொருள்களின் விவரங்கள், பினாமி சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை நிர்வகிப்பவராக மாறினார் காஜல்.

மேலும், தெற்கு தில்லியில் செல்வந்தர்கள் வாழும் பகுதியாக கருதப்படும் ஃபிரண்ட்ஸ் காலனியில் ரூ.100 கோடி மதிப்புள்ள வீட்டை காஜலுக்கு பரிசாகக் கொடுத்தார் ரவி. 

அதில், தனது உதவியாளர்களுடன் காஜல் வாழ்ந்து வந்தார். ரவிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுவதை அறிந்து சொகுசு வீட்டிலிருந்து காஜல் மற்றும் அவரின் உதவியாளர்கள் வெளியேறியுள்ளனர். சோதனைக்குப் பிறகு சொகுசு வீட்டிற்கு காவல் துறையினர் சீல் வைத்தனர். 

ரப்பர் மற்றும் உதிரி பாகங்களை முறைகேடாக கொள்முதல் செய்து, கள்ளச் சந்தையில் தனது குழுவினர் மூலம் ரவி விற்பனை செய்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கள்ளச்சந்தை விற்பனை மூலம் செல்வந்தராகவும் மாறியுள்ளார். 

ரவி கானாவின் சகோதரர் ஹரேந்திர பிரதான், நொய்டாவில் வாழ்ந்துவந்த பிரபல ரெளடியாவார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு இறந்ததைத் தொடர்ந்து அந்த பொறுப்புகளை ரவி கவனிக்கத் தொடங்கியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com