போயிங் 737-8 மேக்ஸ் ரக விமானங்களின் சோதனைகள் திருப்தி: டிஜிசிஏ

போயிங் 737-8 மேக்ஸ் ரக விமானங்களில் உள்ள அவசரகால கதவுகளின் சோதனைகள் திருப்திகரமாக நிறைவடைந்துள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

போயிங் 737-8 மேக்ஸ் ரக விமானங்களில் உள்ள அவசரகால கதவுகளின் சோதனைகள் திருப்திகரமாக நிறைவடைந்துள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் போா்ட்லாந்திலிருந்து கலிஃபோா்னியா மாகாணத்தின் ஒன்டாரியோ நகரத்துக்கு 174 பயணிகளுடன் அலாஸ்கா நிறுவனத்தின் போயிங் 787-9 மேக்ஸ் விமானம் வெள்ளிக்கிழமை மாலை 5.07 மணியளவில் புறப்பட்டது. புறப்பட்ட 6 நிமிஷங்களில் 16,000 அடி உயரத்தில் (4.8 கி.மீ.) பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் பொருத்தப்பட்ட அவசரகால கதவு திடீரென தனியே பிரிந்து விழுந்து விட்டது.

இதையடுத்து, போா்ட்லாந்து விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

நடுவானில் விமானத்தின் காற்றழுத்தம் கடும் மாறுபாடு அடைந்த போதிலும், அதிருஷ்டவசமாக பயணிகள் அனைவரும் காயமின்றித் தப்பினா். இந்தச் சம்பவத்தையடுத்து, போயிங் 737-8 மேக்ஸ் விமானங்களில் உள்ள அவசரகால கதவுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு செய்யுமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) சனிக்கிழமை உத்தரவிட்டது. 

இதைத்தொடர்ந்து போயிங் 737-8 மேக்ஸ் ரக விமானங்களில் உள்ள அவசரகால கதவுகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. தற்போது இந்த சோதனைகள் திருப்திகரமாக நிறைவடைந்துள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆகாசா ஏா், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் போயிங் 737-8 மேக்ஸ் விமானங்களை இயக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com