குவாஹாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோயிலில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா இன்று வழிபாடு மேற்கொண்டார்.
பாஜகவின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக நட்டா செவ்வாய் இரவு குவஹாட்டி வந்தடைந்தார்.
நிலச்சல் மலையில் உள்ள புகழ்பெற்ற காமாக்யா தேவி கோயிலுக்குச் சென்ற அவருக்கு கோயில் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலில் சுமார் 25 நிமிடங்கள் செலவிட்டார்.
பின்னர், விருந்தினர் மாளிகையில் இருந்து ஸ்ரீமந்தா சங்கர்தேவ் கலாக்க்ஷேத்ராவுக்கு சென்றார். அங்கு நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
நட்டாவுடன், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அவரது அமைச்சரவை அமைச்சர்கள், மாநில பாஜக எ.பி.க்கள், எம்.எல்.எ.க்கள் மற்றும் பிற மூத்த கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
நட்டா நாளை அருணாச்சலப் பிரதேசம் செல்வதற்கு முன், கம்ரூப்பில் உள்ள அமிங்கானில் தேர்தல் கமிட்டி உறுப்பினர்களிடம் பேச உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹார்ட்டின் பட டிரைலர்!

கட்டுமான தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்காக தொடங்கியுள்ள அரசு ஐடிஐயில் நேரடி சோ்க்கை

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு: வடமாநில இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா்







