இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புக்கு 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற முறை உகந்ததல்ல என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைத்தது.
இதையும் படிக்க | பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள்!
அக்குழுவின் செயலர் நிதின் சந்திராவுக்கு கடிதம் இன்று (வியாழக்கிழமை) மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடிதம் அனுப்பினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஏற்புடையது அல்ல. இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புக்கு இந்த முறை உகந்தது கிடையாது.
இந்த விஷயத்தில் ஆராய்ந்து செயல்படுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடமும், உயர்நிலைக் குழுவிடமும் கோரிக்கை வைக்க உள்ளேன்.
இது எங்களின் குரல் மட்டுமல்ல, இந்தியாவின் குரல் ஆகும். இந்த விவகாரத்தில் நமது மாநிலத்தின் கொள்கை, கூட்டாட்சி அமைப்பு முறை அனைத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | பாஜக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது: அப்சல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?
முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு!

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



