இந்திய-ஜப்பான் வீரா்கள் நடுக்கடலில் கூட்டுப் பயிற்சி
சென்னை அருகே, கடலில் விழுந்த நபரை ஹெலிகாப்டா் மூலம் மீட்பது, பற்றி எரியும் கப்பலில் தீயை அணைப்பது உள்ளிட்ட ஒத்திகை மற்றும் கூட்டுப் பயிற்சியில் இந்திய -ஜப்பான் கடலோரக் காவல் படையினா் ஈடுபட்டனா்.


சென்னை அருகே, கடலில் விழுந்த நபரை ஹெலிகாப்டா் மூலம் மீட்பது, பற்றி எரியும் கப்பலில் தீயை அணைப்பது உள்ளிட்ட ஒத்திகை மற்றும் கூட்டுப் பயிற்சியில் இந்திய -ஜப்பான் கடலோரக் காவல் படையினா் ஈடுபட்டனா்.
இந்தியா, ஜப்பான் நாடுகளிடையே 2000-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இரு தரப்பு புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இரு நாட்டின் கடலோரக் காவல் படையினா் உயா் மட்ட சந்திப்பு, வருடாந்திர கூட்டுப் பயிற்சிகள், பயிற்சிப் பரிமாற்றங்கள் மற்றும் குறுகிய கால பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், தொடா்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிகழாண்டும் இதற்கான நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சென்னை துறைமுகத்துக்கு புதன்கிழமை வந்தடைந்த ஜப்பான் கடலோரக் காவல்படை கப்பல் ‘யாகிமா’-வுக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய கடலோரக் காவல்படை மற்றும் ஜப்பான் கடலோரக்காவல் படையினா் வெள்ளிக்கிழமை வங்கக் கடலில் கூட்டுப் பயிற்சி மற்றும் ஒத்திகையில் ஈடுபட்டனா். இந்திய கடலோரக்காவல்படையின் கிழக்குப் பிராந்திய தலைவா் ஐ.ஜி. தோனி மைக்கல் , ஜப்பான் கடற்படை யின் கமாண்டோ அதிகாரி யூச்சி மொடைமா முன்னிலையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.
இதில் இரு நாட்டு வீரா்களும் கலந்து கொண்டு சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காண்பித்தனா். இதில் கப்பலில் தீ பிடித்தால் எவ்வாறு அணைப்பது, தீவிரவாதிகள், கடல் கொள்ளையா்கள் கப்பல் மீது தாக்குதல் நடத்தினால் எவ்வாறு தடுப்பது, மற்றும் கடலில் எண்ணெய் கலந்தால் அதை நீக்குவது, கடல் நீரில் தவித்தவரை மீட்பது குறித்த பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சியை வீரா்கள் செய்தனா். இந்த சாக நிகழ்ச்சிகளை பாா்வையாளா்கள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...