
இந்திய ராணுவத்தின் வலிமை அதன் மதச்சார்பற்ற தன்மையில் அடங்கியுள்ளது என்று லெப்டினண்ட் ஜெனரல் மனோஜ் குமார் கத்தியார் தெரிவித்தார்.
சனிக்கிழமை நடைபெற்ற ராணுவ வீரர்களுக்கான விழாவில் பேசிய ராணுவ துணை தளபதி மனோஜ் குமார், ”இந்திய ராணுவத்தை தனித்துவமாக காட்டுவது இரண்டு விஷயங்கள். முதலாவது நமது மதச்சார்பற்ற தன்மை, இரண்டாவது அரசியல் சார்பற்ற பண்பு என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “இதற்கான அர்த்தம் நாம் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம் என்பதாகும். இந்த இரு கொள்கைகளில் ஏதேனும் சமரசம் செய்வது என்பது ராணுவத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
இனி வரும் எந்தப் போரிலும் பெண் வீரர்கள் மிக முக்கியப் பங்காற்றுவார்கள். ராணுவத்தில் பெண் வீரர்களை சேர்ப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மோதல்களில் தொழில்நுட்பம் பெரும் பங்கு வகித்தாலும், ராணுவ வீரர்களின் பங்கும் முக்கியமானதாக இருக்கும்.” என்று மேற்கு படைப் பிரிவின் ராணுவ தளபதி மனோஜ் குமார் கத்தியார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.