காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனையில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர்

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் சிவசேனையில் இணைந்தார்.
காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனையில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர்

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் சிவசேனையில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகன் மிலிந்த் தியோரா. இவர் மன்மோகன் சிங் அரசில் இணையமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகுவதாக அறிவித்தார். மிலிந்த் தியோரா, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் இணைவார் என கடந்த சில நாள்காக அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் பரவி வந்தன. 

அதன்படி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கையோடு மும்பையில் உள்ள மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இல்லத்திற்கு சென்ற மிலிந்த் தியோரா, அவரது முன்னிலையில் சிவசேனையில் இணைந்தார். சிவசேனையில் இணைந்த பிறகு, மிலிந்த் தியோரா கூறியதாவது, இந்தியாவில் மத்தியிலும் மாநிலங்களிலும் வலுவான அரசு தேவை. 

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா இன்று வலுவாக உள்ளது என்பது நம் அனைவருக்கும் பெருமையான விஷயம். கடந்த 10 ஆண்டுகளில் மும்பையில் ஒரு தீவிரவாத தாக்குதல் கூட நடக்கவில்லை. மும்பைவாசிகளுக்கு இது ஒரு பெரிய சாதனையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மிலிந்த் தியோரா வரும் மக்களவைத் தேர்தலில், மும்பை தெற்கு தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com