மிலிந்த் தியோரா சிவசேனையில் இணைந்தால் வரவேற்பேன்: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா சிவசேனையில் இணைந்தால் வரவேற்பேன் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். 
மிலிந்த் தியோரா சிவசேனையில் இணைந்தால் வரவேற்பேன்: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா சிவசேனையில் இணைந்தால் வரவேற்பேன் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகன் மிலிந்த் தியோரா. இவர் மன்மோகன் சிங் அரசில் இணையமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், காங்கிரஸின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்துள்ளேன், கட்சியுடனான எனது குடும்பத்தின் 55 ஆண்டுகால உறவை முறித்துக் கொண்டேன். தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மிலிந்த் தியோரா, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் விரைவிலேயே இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில் மிலிந்த் தியோராவின் நடவடிக்கை பற்றி கேள்விப்பட்டேன்.

அவர் சிவசேனையில் இணைந்தால் வரவேற்பேன் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com