மனைவியுடனான தகராறு... முடிவில் சோகம்

மனைவியுடனான தகராறு அவரது சகோதரர்கள் தலையிட சோகத்தில் முடிந்தது.
மனைவியுடனான தகராறு... முடிவில் சோகம்

39 வயதான நபர், அவரது மனைவியின் சகோதரர் மற்றும் சகோதரரின் நண்பர்கள் தாக்கியதால் உயிரிழந்ததாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

தெற்கு தில்லியில் உள்ள சங்கம்விஹார் பகுதியில் டிச.29 அன்று ராகேஷ் என்பவர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரைத் தாக்கும் விடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.

அதில், சில நபர்கள் ராகேஷை வீட்டை விட்டு வெளியே இழுத்து அடிப்பதும் உதைப்பதுமான காட்சிகள் இடம்பெற்றன.

பின்னர் இரத்த காயத்தோடு அவரை அந்த நபர்கள் விட்டுச் சென்றனர்.

மனைவியுடன் சண்டை ஏற்பட்டதாகவும் அதனை மனைவி தனது சகோதரரிடம் தெரிவிக்கவே அவர் நண்பர்களுடன் தில்லிக்கு வந்து ராகேஷைத் தாக்கியதாகவும் தெரிகிறது.

சிகிச்சை பலனின்றி ராகேஷ் திங்கள்கிழமை உயிரிழந்துள்ளார். ராகேஷின் உறவினர்கள் இந்த விவகாரத்தில் மனைவியையும் அவரது குடும்பத்தாரையும் கைது செய்யக் கோரி காவல் நிலையத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகேஷின் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com