மகர சங்கராந்தியை முன்னிட்டு புனித நீராடிய பக்தர்கள்!

மகர சங்கராந்தியை முன்னிட்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சங்கமத்தில் இன்று புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகர சங்கராந்தியை முன்னிட்டு புனித நீராடிய பக்தர்கள்!

பிரயாக்ராஜ்: மகர சங்கராந்தியை முன்னிட்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சங்கமத்தில் இன்று புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகர சங்கராந்தியை முன்னிட்டு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, கொண்டாட்டங்களுக்காக மாநிலம் முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

இந்த நிலையில், இன்று மாலை 6 மணி வரை சுமார் 20.90 லட்சம் பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடியதாக மாக் மேளா அதிகாரியான தயானந்த் பிரசாத் தெரிவித்தார். 

இது குறித்து குருக்களான ராஜேந்திர மிஸ்ரா கூறுகையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் சங்கமத்தில் புனித நீராட பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமம் சங்கமிக்கும் இடமாகும்.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் சம்பவ இடத்தில் அசம்பாவிதங்களை தடுக்க நிறுத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்காக எட்டு படித்துறைகள் மற்றும் ஆறு பொந்தூன் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 18,000 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு தற்காலிக மருத்துவமனைகள், 14 காவல் நிலையங்கள், 41 காவல் நிலையங்கள் மற்றும் 14 தீயணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கோரக்பூரில், மகர சங்கராந்தி அன்று அதிகாலை 4 மணிக்கு கோரக்நாத் கோயிலில் மகாயோகி கோரக்நாத்திற்கு முதல்வர் கிச்சடி வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலம் முழுவதும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சிவபெருமானின் அவதாரமான மகாயோகி கோரக்நாத்துக்கு கிச்சடி கொடுக்க பல லட்சம் பக்தர்கள் கோரக்நாத் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனை முன்னிட்டு பக்தர்களுக்காக கோயில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com