கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை...: மம்தா பானர்ஜி

மெட்ரோ ரயில் விரிவாக்கக் கோரிக்கை தனது கனவு திட்டத்தில் குறுக்கிடுவதை குறித்து மம்தா பேசியுள்ளார்.
கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை...: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மெட்ரோ ரயில்பாதை விரிவாக்கத்துக்காக ரயில்வே நிர்வாகத்தின் கோரிக்கையை மம்தா பானர்ஜி நிராகரித்துள்ளார்.

தக்‌ஷினேஸ்வர் ஆலயத்தையும் ரயில் நிலையத்தையும் இணைக்கும் நடை மேம்பாலத்தை தகர்க்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம், மாநில அரசுக்கு நவம்பர் மாதத்தில் அனுப்பிய கடிதத்தில் நடை மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ பணிகள் மேற்கொள்ளவும் அங்குள்ள கட்டடங்களை இடம் மாற்றவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இது குறித்து மம்தா, “மாநிலத்தில் துர்கா பூஜையை அனுமதிக்காதபோது அவர்கள் (பாஜக) என்னை விமர்சித்தனர். மதத்தைக் குறித்து பேசுகிறார்கள். இப்போது தக்‌ஷினேஸ்வர் மேம்பாலத்தை இடிக்க வேண்டுகிறார்கள். இதுதான் அவர்களது உண்மையான குணம். என் உடலில் கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும்வரை இந்த மேம்பாலத்தை இடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது கனவு திட்டங்களில் ஒன்று இதுவென்றும் மெட்ரோவுக்கு ஒத்துழைப்பு அழிப்போமே தவிர பாரம்பரியத்தை அழிக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா மெட்ரோ ரயில் தனது சேவையை இலகுவாக்க ரயில் விகாஸ் நிகாமிடம் ரயில்பாதை விரிவாக்கத்துக்காக கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com