ரூ.5.66 கோடி: 3 மாதத்தில் வசூலான அபராதம்!

முறையான பயணச்சீட்டில்லாத பயணிகளிடமிருந்து இந்தத் தொகை வசூலிக்கப்பட்டது.
ரூ.5.66 கோடி: 3 மாதத்தில் வசூலான அபராதம்!

மங்களூரு: கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் கொங்கன் ரயில்வே துறையின் தீவிர பயணச்சீட்டு பரிசோதனை முகாமின் விளைவாக ரூ.5.66 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கொங்கன் ரயில்வே அதிகாரிகள், பயணச்சீட்டு பரிசோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

டிச.2023 ஒரு மாதத்தில் மட்டும் அதிகாரிகள் ரூ.1.95 கோடி அபராதமாக வசூலித்துள்ளனர். முறையான பயணச்சீட்டின்றி பயணித்த 6,675 பயணிகளிடமிருந்து இந்தத் தொகை வசூலிக்கப்பட்டது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரை ரூ.5.66 கோடி ரூபாய், 18 ஆயிரம் பயணிகளிடமிருந்து பெறப்பட்டது.

பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதைத் தடுக்கும் வகையில் புத்தாண்டிலும் இந்தச் சோதனை தொடர்வுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com