மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அயோத்திக்கென சிறப்பு வானிலை இணையதளம் தொடக்கம்

அயோத்திக்கென சிறப்பு வானிலை இணையதளத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தொடக்கியிருக்கிறது.

News image
அயோத்தியில் ராமர் கோயில்
Updated On :18 ஜனவரி 2024, 9:33 am

DIN


அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அயோத்திக்கென சிறப்பு வானிலை இணையதளத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தொடக்கியிருக்கிறது.

அயோத்தி மற்றும் அதன் அருகில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பற்றிய வானிலை நிலவரங்களை மட்டும் சிறப்பாக எடுத்துரைக்கவென்று புதிய இணையதளம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. 

தற்போது, இந்த இணையதளத்தில் அயோத்தி, பிரயாக்ராஜ், வாராணசி, லக்னௌ, புது தில்லி உள்ளிட்ட பகுதிகளின் வானிலை நிலவரங்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அந்தப் பகுதியின் வெப்பநிலை, புழுக்கம், காற்றின் திசை, காற்றின் வேகம், மழைப்பொழிவு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெள்ளத்தெளிவாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் அம்சமாக, உலகம் முழுவதும் அதிக மக்களால் பேசப்படும் மொழிகளான ஹிந்தி, ஆங்கிலம், உருது, சீனம், பிரெஞ்ச், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஏழு நாள்களுக்கான வானிலை நிலவரமும், சூரிய உதயம், சூரியன் மறையும் நேரங்களும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வழங்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில்..

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் வரும் 22-ஆம் தேதி மூலவா் சிலை பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்கவுள்ளனா்.

வரும் 22-ஆம் தேதி மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு, 1 மணி வரை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பிரதமா் மோடி, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், ராமா் கோயில் அறக்கட்டளையின் தலைவா் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோா் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.