பழங்குடியினரின் குழந்தைகள் கல்வி கற்பதை பாஜக விரும்பவில்லை: ராகுல் காந்தி

பழங்குடியின மக்களின் குழந்தைகள் கல்வி கற்பதை பாஜக விரும்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பழங்குடியின மக்களின் குழந்தைகள் கல்வி கற்பதை பாஜக விரும்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின் ஒருபகுதியாக அஸ்ஸாமில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி மஜூலியில் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார்.

பழங்குடியின மக்களிடம் ராகுல் காந்தி பேசியதாவது, “நாங்கள் உங்களை ஆதிவாசிகள் என்று அழைக்கிறோம். பாஜக உங்களை வனவாசிகள் என்றழைக்கிறது. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.

பாஜக உங்களை காடுகளிலேயே வைத்திருக்க விரும்புகிறது. உங்களின் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று கல்வி கற்பதை பாஜக விரும்பவில்லை. உங்களின் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதையோ, தொழில் செய்வதையோ பாஜக விரும்பவில்லை.

உங்களிடம் இருந்து எடுக்கப்பட்டதை மீண்டும் வழங்குவதற்கு நாங்கள் விரும்புகிறோம். உங்களது நிலம், வனம் மற்றும் நீர் ஆகியவை மீண்டும் உங்களிடம் வழங்கப்பட்டாக வேண்டும். அதற்காக நாங்கள் சட்டம் இயற்றுவோம். 

பல மாதங்களாக மணிப்பூரில் உள்நாட்டுப் போர் நடப்பது போன்ற சூழல் நிலவி வருகிறது, இருப்பினும் பிரதமர் மோடி ஒருமுறை கூட அங்கு செல்லவில்லை. ஆனால் நாங்கள் மணிப்பூரில் இருந்தே இந்த நடைப்பயணத்தை துவக்கினோம். 

நாகா ஒப்பந்தம் கொண்டுவருவதில் பாஜக அரசு தோற்றுவிட்டது. இந்த ஒப்பந்தத்தை கொண்டுவருவதாக நரேந்திர மோடி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை.” என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com