ஜார்க்கண்ட் முதல்வர் வீட்டில் பலத்த பாதுகாப்பு
முதல்வரிடம் மேற்கொள்ளவிருக்கும் விசாரணையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ளவுள்ளதால் முதல்வரின் வீடு மற்றும் அமலாக்கத்துறையின் வட்டார அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நில மோசடி விவகாரத்தோடு தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டு முதல்வர் மீது எழுந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
அதிகாரிகள் பிற்பகலில் விசாரணையத் தொடங்கவுள்ளனர். இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மூத்த சிறப்பு காவல் கண்காணிப்பாளர் சந்தன் குமார் பிடிஐ-க்குத் தெரிவித்தாவது:
ஆயிரத்துக்கும் அதிகமான காவல் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மூன்று அடுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அமர்க்களமாக தயாராகி வரும் அயோத்தி ராமர் கோயில் - புகைப்படங்கள்
ஜேஎம்எம் மற்றும் பழங்குடியினரின் போராட்டத்துக்கு மத்தியில் முதல்வர் மீதான விசாரணை நடக்கவிருக்கும் நிலையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படாதிருக்க இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...