மக்கள் இந்த 9 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்!: பிரதமர்

நாட்டு மக்கள் இந்த 9 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

குஜராத் மாநிலம் கோடல்தம் அறக்கட்டளை புற்றுநோய் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர், நாட்டு மக்களை 9 உறுதிமொழிகளை ஏற்குமாறு 

1. உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக மக்களை வெளிநாடுகளைப் பற்றி யோசிக்கும்முன் இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தளங்களைத் தேர்வு செய்து அங்கு சென்று நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

2. மேலும் தண்ணீரை சேமிக்க உறுதி ஏற்குமாறு கூறியுள்ளார். ஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமிக்குமாறு கூறினார். 

3. ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று இணையவழி பணபரிவர்த்தனைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். 

4. அனைத்து மக்களும் தங்கள் பகுதிகளை சுத்தத்தில் சிறந்து விளங்கும் பகுதிகளாக மாற வேண்டும் எனக் கூறினார்.

5. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு முன்னுரிமை தருமாறு கேட்டுக்கொண்டார். மேலும் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். 

6. நாட்டு மக்கள் தங்களது தினசரி உணவில், தினைப் பொருள்களைச் சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். 

7. விளையாட்டை தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக்கிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். 

8. எந்த வித போதைப் பொருள்களுக்கு அடிமையாக வேண்டாம் என அறிவுறுத்தினார். 

9. மேலும் இந்தியர்கள் தங்கள் திருமண நிகழ்வுகளை இந்தியாவிற்குள்ளேயே நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com