அயோத்தி விழா: பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை

இந்தியப் பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


புது தில்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று ராமர் கோயில் சிலை பிராண பிரதிஷ்டை விழா நடைபெறவிருக்கும் நிலையில், இந்தியப் பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.

அடுத்து ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாளை முன்னிட்டு, அன்றைய தினமும் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தல், இந்தியப் பங்குச் சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை ஒட்டுமொத்தமாக 2 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளன.

முன்னதாக, ராமர் கோயில் சிலை பிரதிஷ்டையில் பொதுமக்கள் பலரும் பங்கேற்கும் வகையில் மத்திய அரசு இன்று மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், மகாராஷ்டிர மாநில அரசும் இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.

தொடர்ந்து, குஜராத் மற்றும் புதுச்சேரியிலும் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

அயோத்தியில் ராமா் கோயில் கருவறையில் மூலவா் ஸ்ரீ பால ராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை இன்று நடைபெறுகிறது. பிரதமா் நரேந்திர மோடி உள்பட நாட்டின் முக்கியப் பிரமுகா்கள் 7,000-க்கும் மேற்பட்டோா் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனா்.

பிரதமர் நரேந்திர மோடி அயோத்திக்கு காலை 10 மணிக்கு வருகை தரவிருக்கிறார். இந்த நிலையில், பல முக்கிய பிரமுகர்கள் அயோத்திக்கு வந்து கொண்டிருக்கின்றனர். சென்னையில் இருந்து நடிகர் ரஜினி, தனுஷ் உள்ளிட்ட விருந்தினர்கள் நேற்று மாலையே அயோத்தி சென்றடைந்துவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com