அயோத்தி ராமர் பிரதிஷ்டை: கொல்கத்தாவில் ஊர்வலம்! 

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு வடக்கு கொல்கத்தாவில் ராமர் ஊர்வலம் நடைபெறுகிறது. 
கோயில் முழுவதும் மலா்கள், சிறப்பு விளக்குகளால் அலங்கரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கோயில் முழுவதும் மலா்கள், சிறப்பு விளக்குகளால் அலங்கரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு வடக்கு கொல்கத்தாவில் ராமர் ஊர்வலம் நடைபெறுகிறது. 

இந்த ஊர்வலம் கணேஷ்டாக்கீஸ் அருகே உள்ள வைகுந்தா கோயிலில் தொடங்கி சித்தரஞ்சன் அவென்யூவில் உள்ள ராமர் கோயிலில் நிறைவடையும். 

ராமர் மற்றும் துர்கா தேவி அலங்கரிக்கப்பட்டுத் தேர் ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்திற்கு மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான சுவேந்து மற்றும் ராகுல் சின்ஹா உள்ளிட்ட தலைவர்கள் தலைமை தாங்கினர். 

ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அவர்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புடவை அணிந்து ஊர்வலத்தை வண்ணமயமாக்கினர். 

இன்னும் சற்று நேரத்தில் ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறுவதையொட்டி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com