மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காணாமல் போன ஆசிரியை சடலமாக மீட்பு!

கர்நாடகத்தில் காணாமல் போன ஆசிரியையின் உடல், கோயிலுக்கே அருகே புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

News image
கோப்புப்படம்.
Updated On :23 ஜனவரி 2024, 1:02 pm

DIN

கர்நாடகத்தில் காணாமல் போன தனியார் பள்ளி ஆசிரியையின் உடல் கோயிலுக்கு அருகே புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

மக்னிக்யாஹல்லி கிராமத்தில் 28 வயதான தனியார் பள்ளி ஆசிரியை தீபிகா வி கோவ்டா, தனது கணவர் மற்றும் 7 வயது குழந்தையுடன் வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றவர் மாலை வீடுதிரும்பவில்லை.

இதையடுத்து சனிக்கிழமை கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திங்கள் கிழமை குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடிய விசாரித்தபோது, ஒரு இடத்தில் துர்நாற்றமடிப்பதை கவனித்தனர். 

நாற்றமடிக்கும் இடத்திற்கு சென்று தரையை லேசாக தோண்டியபோது காணாமல் போன ஆசிரியையின் துணி கண்டுபிடிக்கப்பட்டது. உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், ஆசிரியையின் உடலை காவல்துறையினர் தோண்டி எடுத்தனர். 

சட்டப்பிரிவு 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தெரிந்தவர்கள்தான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் எனக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.