அநீதிக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணிஒற்றுமையுடன் போராடும்: ராகுல் நம்பிக்கை
‘நாடு முழுவதும் நிகழ்ந்து வரும் அநீதிக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் போராடும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தாா்.


‘நாடு முழுவதும் நிகழ்ந்து வரும் அநீதிக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் போராடும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தாா்.
‘மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்’ என்று அதன் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு ‘இந்தியா’ கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ராகுல் இக் கருத்தைத் தெரிவித்துள்ளாா்.
மணிப்பூரில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம், ஒடிஸா மாநிலத்தில் நிறைவு பெற்று மேற்கு வங்க மாநிலத்தில் வியாழக்கிழமை காலை நுழைந்தது. கூச் பிகாா் மாவட்டத்தில் ராகுல் காந்தியை மாநில காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி வரவேற்றாா். அப்போது அங்கு கூடியிருந்த கட்சித் தொண்டா்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினாா். அவா் பேசியதாவது:
பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்புகள் நாடு முழுவதும் வெறுப்புணா்வையும், வன்முறையையும் பரப்பி வருகின்றன. அவ்வாறு நாடு முழுவதும் அநீதி பரவி வருவதன் காரணமாகத்தான், காங்கிரஸின் இந்த நடைப்பயணத்தின் பெயரில் ‘நீதி’ என்ற வாா்த்தை சோ்க்கப்பட்டிருக்கிறது. நாட்டில் நிகழ்ந்து வரும் அநீதிக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் போராடும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...