இன்று வாக்காளர் தினம்: மோடியுடன் ஒரு கோடி முதல்முறை வாக்காளர்கள் உரையாடல்

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முதல் முறை வாக்காளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடுகிறார்.
இன்று வாக்காளர் தினம்: மோடியுடன் ஒரு கோடி முதல்முறை வாக்காளர்கள் உரையாடல்

புது தில்லி: நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முதல் முறை வாக்காளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடுகிறார்.

இன்று வாக்காளர் தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, முதல் முறை வாக்காளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் வகையில் பாஜகவின் யுவ மோர்ச்சா பிரிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1 கோடி முதல் முறை வாக்காளர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் பகுதிகளிலிருந்து முதல் முறை வாக்காளர்கள் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கவிருக்கும் இளம் தலைமுறையினர், தாங்கள் வாக்களிக்கவிருப்பது குறித்து எந்த அளவுக்கு ஆர்வத்தோடு இருக்கிறோம் என்பதை பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்கள்.

முதல் முறையாக, ஒரு பிரதமர், முதல் முறை வாக்காளர்களிடம் உரையாற்றவிருக்கிறார் என்றும், பிரதமருடன் நேரடியாக உரையாட மிகவும் ஆர்வத்தோடு இருப்பதாகவும் இன்றைய உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கும் இளம்தலைமுறையினர் தெரிவித்துள்ளனர்.

முதல் முறை வாக்காளர்களுடன் பிரதமர் உரையாடுவதன் மூலம், ஜனநாயகத்தின் பலம் அதிகரிக்கப்படும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com