ஜெய்ப்பூர் டீக்கடையை புகழ்ந்த பிரான்ஸ் அதிபர்!

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் உள்ள டீக்கடையை பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மாக்ரோன் பாராட்டியுள்ளார். 
பிரான்ஸ் அதிபர் மற்றும் பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படம் | PTI
பிரான்ஸ் அதிபர் மற்றும் பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படம் | PTI

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள டீக்கடை ஒன்றில் தேநீர் குடித்து, அதைப் பாராட்டியதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்தார். 

ஜெய்ப்பூரில் உள்ள சுற்றுலாத்தளங்களை பிரதமர் மோடியுடன் கண்டுகளித்த பிரான்ஸ் பிரதமர், ஜெய்ப்பூரில் உள்ள டீக்கடை ஒன்றில் தேநீர் அருந்தினார். பிரதமர் மோடிக்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனுக்கும் பாரம்பரியமான சாஹு தேநீர் செய்துகொடுத்ததாக கடை உரிமையாளர் ராஜ் குமார் சாஹு தெரிவித்தார். 

தேநீர் அருந்தும்போது இந்தியாவின் இணையவழி பரிவர்த்தனைகள் குறித்து பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபருக்கு விளக்கியதாக அவர் கூறினார். தேநீருக்கு இம்மானுவேல் யுபிஐ மூலம் பணம் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும், தேநீரை பிரான்ஸ் அதிபர் புகழ்ந்ததாகவும் கடை உரிமையாளர் கூறியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com