ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

தமிழகம் உள்பட 23 மாநிலங்களுக்கு பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

தமிழகம் உள்பட 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு  தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா நியமித்துள்ளார். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 12:11 pm

புது தில்லி : விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் தேர்தல் பணிகளில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  

இந்நிலையில், தமிழகம் உள்பட 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு  தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா நியமித்துள்ளார். 

அந்த வகையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்துக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சியின் தேசியச் செயலாளர் அரவிந்த் மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி பாஜக பொறுப்பாளராக உள்ள நிர்மலா குமார் சுரானா, அக்கட்சியின் தேர்தல் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளத்தின் தேர்தல் பொறுப்பாளராக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக பாஜக தேசிய பொதுச் செயலாளருமான ராதா மோகன் தாஸ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 

இமாச்சல பிரதேச தேர்தல் பொறுப்பாளராக ஸ்ரீகாந்த் சர்மா, கோவா தேர்தல் பொறுப்பாளராக ஆஷிஷ் சூட், மேற்கு வங்க பாஜக தேர்தல் பொறுப்பாளராக  மங்கள் பாண்டே, உத்தரப்பிரதேச  தேர்தல் பொறுப்பாளராக பாஜக தலைவர் பைஜயந்த் ஜெய் பாண்டா, பிகார் மாநில தேர்தல் பொறுப்பாளராக பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி, குஜராத் மற்றும் சண்டிகர் மாநிலங்களுக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.