மும்பையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த 5 பேர் கைது!

நகைக்கடைக்காரர் மற்றும் அவரது மனைவியை தாக்கி துப்பாக்கி முனையில் ரூ.1.43 கோடி மதிப்புள்ள தங்கத்தை கொள்ளையடித்த 5 பேரை மும்பை காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மும்பை: நகைக்கடைக்காரர் மற்றும் அவரது மனைவியை தாக்கி துப்பாக்கி முனையில் ரூ.1.43 கோடி மதிப்புள்ள தங்கத்தை கொள்ளையடித்த 5 பேரை மும்பை காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

ஜனவரி 19ஆம் தேதியன்று புறநகர் சாண்டாக்ரூஸின் வகோலா பகுதியில் நடந்த கொள்ளை தொடர்பாக காவல் துறையினர் 5 பேரை கைது செய்தனர். நகைக்கடைக்காரரின் முன்னாள் ஊழியரான பாலுசிங் பர்மர்(20), பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த மஹிபர்ல் சங்ராம் சிங்(21) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்த நிலையில் லக்கி மிதாலால் பில்(21), மங்கிலால் மிதாலால் பில்(28) மற்றும் கைலாஷ் பராலால் பில்(19) ஆகியோர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து காவல் துறையினர் தெரிவித்ததாவது:

முன்னாள் ஊழியரான பாலுசிங் தனது முன்னாள் உறுமையாளரான நரேஷ் சோலங்கியின் அடுக்குமாடி குடியிருப்பில் மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சென்றுள்ளனர். அங்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தம்பதியை துப்பாக்கி முனையில் அடித்து மிரட்டி ரூ.1.43 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துச் சென்றனர்.

சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரித்ததில், பால்கரில் உள்ள ஒரு காட்டில் புதைத்து வைத்திருந்த ஒரு நாட்டு துப்பாக்கியும் திருடப்பட்ட தங்கத்தை மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com