மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கடும் குளிர்: அயோத்தியில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்!

கடும் குளிர், பனிமூட்டம் காரணமாக அயோத்தியில் பிப்.3 வரை பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

News image
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு
Updated On :29 ஜனவரி 2024, 8:03 am

DIN

கடும் குளிர், பனிமூட்டம் காரணமாக அயோத்தியில் பிப்.3 வரை பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஒரு மாதமாக அதிகப்படியான குளிர் நிலவி வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி பிப்ரவரி 3 வரை ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் காலை 10 - மாலை 3 வரை பள்ளிகள் செயல்படும் என அறிவித்துள்ளது. 

மேலும், பள்ளிகள் செயல்படும் நேரத்தில் குளிரிலிருந்து பாதுகாக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

ஞாயிறன்று தில்லி, உ.பி மற்றும் பிகார் மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 

அயோத்தியில் அடுத்த 6 நாள்களுக்கு கடுமையான பனிமூட்டம் நிலவும் என  அந்த மாநில வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.