வெறுப்பெனும் புயலில் நம் உண்மை நெருப்பு அணைந்திடாது!: ராகுல் காந்தி! 

மகாத்மா காந்திக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி இதுதான் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 
மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் ராகுல் காந்தி | PTI
மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் ராகுல் காந்தி | PTI

இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணம் தற்போது பிகாரை அடைந்துள்ளது. அங்கு அராரியா பகுதியிலுள்ள முகாமில் மகாத்மா காந்திக்கு அவரது நினைவு நாளில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.  

தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, 'இந்த நாளில்தான், வன்முறை மற்றும் வெறுப்பின் சித்தாந்தம் மகாத்மா காந்தியை இந்த நாட்டிடமிருந்து பறித்தது. இப்போது அதே சித்தாந்தம், அவரது கொள்கைகளையும், லட்சியங்களையும் இந்த நாட்டிடமிருந்து பறிக்க நினைக்கிறது' எனக் கூறினார். 

மேலும், 'ஆனால் இந்த வெறுப்பெனும் புயலால் நமது உண்மை மற்றும் நல்லிணக்கம் எனும் நெருப்பு அணைந்திடக்கூடாது. அதுவே நாம் மகாத்மாவிற்கு செய்யும் உண்மையான அஞ்சலி' எனப் பதிவிட்டுள்ளார். 

'மகாத்மா காந்தியின் கொள்கைகளையும் லட்சியங்களையும் அழிக்க முயற்சிப்பவர்களை எதிர்ப்போம் என இந்த நாளில் உறுதியேற்க வேண்டும்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

1948ல் மகாத்மா காந்தி கோட்சே எனும் இந்து தேசியவாதியால் கொலை செய்யப்பட்டார். 1949ல் கோட்சேக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com