தில்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு

தில்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதையடுத்து விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 
தில்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு
தில்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு

தில்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதையடுத்து விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஒரு மாதமாக தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதையடுத்து அங்குள்ளவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறைந்த காண்புத்திறன் உள்ளதன் காரணத்தால் பல்வேறு விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன. 

இந்த நிலையில், அடர் மூடுபனி காரணமாக தேசிய தலைநகரில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட வேண்டிய 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும், 5 விமானங்கள் பல்வேறு இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com