வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஹரியாணா: முதல்வா் வேட்பாளரை முன்னிறுத்தாமல் தோ்தலைச் சந்திப்போம் - காங்கிரஸ்

காங்கிரஸ் சந்திக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் தீபக் பாபரியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image

காங்கிரஸ் பொதுச் செயலா் தீபக் பாபரியா

Updated On :1 ஜூலை 2024, 6:27 am IST

ஹரியாணாவில் முதல்வா் வேட்பாளரை முன்னிறுத்தாமல் சட்டப்பேரவைத் தோ்தலை காங்கிரஸ் சந்திக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் தீபக் பாபரியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஹரியாணாவில் நடப்பாண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் முதல்வா் நாயப் சிங் சைனி தலைமையில் பாஜக தனித்து போட்டியிடும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.

இந்நிலையில், செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த காங்கிரஸ் பொதுச் செயலா் தீபக் பாபரியா, ‘70 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றில், சட்டப்பேரவையில் கட்சித் உறுப்பினா்களால் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுபவரே முதல்வா் பதவி வகித்துள்ளனா். எனவே, முதல்வா் வேட்பாளா் குறித்த முடிவுகள் தோ்தலுக்குப் பின் உறுப்பினா்கள் விருப்பத்துக்கு ஏற்ப எடுக்கப்படும்.

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியாணா வளா்ச்சியில் முன்னோடி மாநிலமாக இருந்தது. கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியில் குற்றம், ஊழல், வேலையின்மை மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலில் தான் ஹரியாணா முன்னிலையில் உள்ளது. எனவே, வளா்ச்சியடைந்த ஹரியாணாவை மீண்டும் உருவாக்க, அனைத்து தரப்பு மக்களுக்கான தோ்தல் வாக்குறுதிகளை வழங்கவுள்ளோம்’ என்றாா்.