மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஆர்எஸ்எஸ்ஸில் இருப்பது குற்றமா? குடியரசுத் துணைத் தலைவர் கேள்வி

ஆர்எஸ்எஸ்ஸில் இருப்பது குற்றமா? என கார்கேவிடம் கேள்வியெழுப்பியுள்ளார் ஜெகதீப் தன்கர்

News image
Updated On :1 ஜூலை 2024, 2:00 pm

DIN

ஆர்எஸ்எஸ்ஸில் இருப்பது குற்றமா? என கார்கேவிடம் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மக்களவையைப் போலவே திங்கள்கிழமை(ஜூலை 1) மாநிலங்களவையிலும் காரசார விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மல்லிகார்ஜுன் கார்கே நீட் தேர்வு விவகாரம் குறித்தும், ஆர்எஸ்எஸ் குறித்தும் பேசியதற்கு, குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் பதிலளித்துப் பேசினார்.

முன்னதாக, கார்கே பேசுகையில், கடந்த 7 ஆண்டுகளில் நீட் தேர்வு வினாக்கள் 70க்கும் மேற்பட்டவை முன்கூட்டியே வெளியாகியுள்ளதாகவும், ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான அரசு, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் உள்பட கல்வி நிறுவனங்கள், கல்வி அமைப்புகளின் முக்கிய உயர்பதவிகளில் ஆர்எஸ்எஸ் ஊடுருவிவிட்டதாகவும் கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

காங்கிரஸ் தலைவரின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதிலளித்து பேசிய மாநிலங்களவை தலைவர் தன்கர், ஆர்எஸ்எஸ்ஸில் இருப்பது குற்றமா? ஆர்எஸ்எஸ் தேசிய மேம்பாட்டுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது என்றார். நாட்டின் முன்னேற்றத்திற்காக அதன் உறுப்பினர்கள் பணியாற்றுவதாகப் பாராட்டியும் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.