
மத்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை(ஜூலை 1) வெளியிடப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 16-ஆம் தேதி நடைபெற்ற மத்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இந்த நிலையில், இந்திய வன சேவைகள்(ஐஎஃப்எஸ்) பிரிவினருக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக தேர்வர்கள் மறுபடியும் விரிவான தகவல்கள் அடங்கிய படிவத்தில் நிரப்பி விண்ணப்பிக்க தேர்வாணையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் குறித்த சந்தேகங்களுக்கும் கூடுதல் தகவல்களுக்கும் 011-23385271, 011-23098543 or 011-23381125 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.