

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் டெட் எனப்படும் ஆசிரியா் தகுதித் தேர்வில் தோ்ச்சி பெற வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு டெட் தாள்-1, தாள்-2 தோ்வுகள் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றன. இத்தேர்வுகளை 4.25 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.
இந்த நிலையில், டெட் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி பெற்றவர்கள் பிப். 2 முதல் சான்றிதழை trb.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.