டெட் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 40% ஆகக் குறைப்பு - அரசாணை வெளியீடு!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 5% குறைப்பு! - அரசாணை வெளியீடு
டெட் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 40% ஆகக் குறைப்பு - அரசாணை வெளியீடு!
IANS
Updated on
1 min read

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் குறைத்து அரசாணை வெளியானது. ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் டெட் தகுதித் தேர்வில், மொத்​தம் 150 மதிப்​பெண்​களுக்கு பொதுப்​பிரி​வினர் 60 சதவீத மதிப்​பெண்​ணும் பி.சி., பி.சி. -​ முஸ்​லீம், எம்.​பி.சி., எஸ்.​சி., எஸ்.டி. பிரி​வினருக்கு 55 சதவீதமும் எடுத்தால் தேர்ச்சி பெறலாம்.

இந்த நிலையில், அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், டி.என்.சி உள்ளிட்ட பிரிவினருக்கு 55 சதவீதமாக இருந்த தேர்ச்சி மதிப்பெண், 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எஸ். சி., எஸ். டி. பிரிவினருக்கு 45 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும் தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் அதே 60 சதவீதத்தில் தொடருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் நிகழாண்டு இரு ஆசிரியா் தகுதித் தோ்வுகள் (டெட்) நடத்தப்படுமென்று ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) வெளியிட்டுள்ள ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியா் பணியில் சேர விரும்புவோருக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராக பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.

Summary

The passing mark in the Teacher Eligibility Test has been reduced by 5%! - Government order issued.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com