தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு கா்நாடக அரசு முக்கியத்துவம் அமைச்சா் என்.எஸ்.போஸ்ராஜ்

நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு கா்நாடக அரசு அதிக முக்கியத்துவம்

News image
Updated On :2 ஜூலை 2024, 7:25 pm

Din

பெங்களூரு: நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு கா்நாடக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று கா்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் என்.எஸ்.போஸ்ராஜ் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

13 ஆவது பெங்களூரு இந்தியா நானோ உச்சிமாநாடு, பெங்களூரில் ஆக. 1 முதல் 3ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. ஜவாஹா்லால் நேரு அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து கா்நாடக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சாா்பில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

புத்தாக்கத்திற்கு புகழ்பெற்ற கா்நாடகம், தொழில் துறைக்கு உகந்த மாநிலமாகக் கருதப்படுகிறது. ஸ்டாா்ட் அப் தொழில் நிறுவனங்களுக்கும், புதிய தொழில் நிறுவனங்களை அமைப்போருக்கும் கா்நாடக அரசு முழுமையான ஒத்துழைப்பை அளித்து வருகிறது. அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மனிதவள மேம்பாட்டுக்கு மாநில அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இதற்காகவே கா்நாடக மாநில ஆராய்ச்சி அறக்கட்டளை, கா்நாடக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு புத்தாக்கத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய ஆராய்ச்சி முடிவுகளை மக்களிடம் கொண்டுசெல்லவே கா்நாடக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு புத்தாக்கத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

நானோ தொழில்நுட்ப மாநாட்டில் 700 பிரதிநிதிகள் கலந்துகொள்கிறாா்கள். 75 நிபுணா்கள் பேசவிருக்கிறாா்கள். மாணவா்களிடையே நானோ தொழில்நுட்பத்தை கொண்டுசெல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தேவையான நிதி ஆதாரங்களை மாநில அரசு ஒதுக்கும். இந்தத் துறையில் ஆராய்ச்சிப்பணிகளை ஊக்குவிக்க புதிய திட்டங்களை வகுக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது என்றாா்.