ஹாத்ரஸில் சம்பவ நடந்த இடத்தினை முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று நேரில் பார்வையிடுகிறார் .
உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில், "போலே பாபா' என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தனியார் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மாலையில் நிகழ்ச்சி முடிந்து, மைதானத்தைவிட்டு மக்கள் கிளம்பும்போது கடும் நெரிசல் ஏற்பட்டது.
"போலே பாபா'விடம் ஆசி பெறவும், அவரது காலடி மண்ணை சேகரிக்கவும் மக்கள் முண்டியடித்தபோது நெரிசல் ஏற்பட்டு, ஒருவர் மீது மற்றொருவர் விழுந்தனர். கூட்டநெரிசலில் சிக்கி 108 பெண்கள், 7 குழந்தைகள், ஒரு ஆண் என 116 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 72 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மாநில தலைமைச் செயலர் மனோஜ் குமார் சிங் தெரிவித்தார். மைதானம் வழுக்கும் தன்மையுடன் இருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு அளவுக்கு அதிகமான கூட்டம் கூடிய நிலையில், போதிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, லாரிகள் மற்றும் பிற கனரக வாகனங்களில் சிக்கந்தர ராவ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒரேயொரு மருத்துவர் மட்டுமே பணியில் இருந்ததாகவும், ஆக்சிஜன் வசதியும் இல்லை எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்த நிலையில் ஹாத்ரஸ் பகுதியில் சம்பவம் நடந்த இடத்தினை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று நேரில் பார்வையிடுகிறார். இதனிடையே இந்த சம்பவத்தில் போலே பாபாவின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்கள் அறிய ஹாத்ரஸ் மாவட்ட நிர்வாகம் தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளன.
ஹாத்ரஸ் - 9454417377
ஆக்ரா மண்டலம் -7839866849
அலிகார் மலைத்தொடர் -7839855724
ஆக்ரா மலைத்தொடர் -7839855724
எட்டா - 9454417438
அலிகார் - 7007459568
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமா் கோயில் நன்கொடை பணம் திருட்டு: எஸ்ஐடி விசாரணை

யோகி ஆதித்யநாத் பிறந்தநாள்: ராஜ்நாத் சிங், மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

உ.பி.யில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து 6 தொழிலாளா்கள் உயிரிழப்பு

உ.பி. மழை, சூறாவளி: உயிரிழப்பு 111-ஆக உயா்வு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




