சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

ராமா் கோயில் நன்கொடை பணம் திருட்டு: எஸ்ஐடி விசாரணை

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை பணம் திருட்டு, அந்தக் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராமஜென்மபூமி தீா்த ஷேத்ர அறக்கட்டளையில் நிதி நிா்வாக குளறுபடி ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) புதன்கிழமை விசாரணை மேற்கொண்டது.

News image

ராமா் கோயில்

Updated On :18 ஜூன் 2026, 2:01 am IST

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை பணம் திருட்டு, அந்தக் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராமஜென்மபூமி தீா்த ஷேத்ர அறக்கட்டளையில் நிதி நிா்வாக குளறுபடி ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) புதன்கிழமை விசாரணை மேற்கொண்டது.

உத்தர பிரதேச அரசால் அமைக்கப்பட்ட அந்தக் குழு, அறக்கட்டளையின் பொதுச் செயலா் சம்பத் ராய், நிா்வாகி கோபால் ராவ் ஆகியோரிடம் அயோத்தியில் விசாரணை நடத்தியது. பணத்தை எண்ணி, அறக்கட்டளையின் நிதி கணக்குகளைப் பராமரிக்கும் நபா்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கோயிலில் நன்கொடையாகப் பெறப்படும் நகை மற்றும் பிற உலோகங்கள் பாதுகாத்து வைக்கப்படும் அறையை எஸ்ஐடியின் தலைவரான லக்னெள மண்டல ஆணையா் விஜய் விஸ்வாஸ் பந்த் ஆய்வு மேற்கொண்டாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.