தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

யோகி ஆதித்யநாத் பிறந்தநாள்: ராஜ்நாத் சிங், மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் 54-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தலைவர் வாழ்த்துகள் குறித்து...

Yogi Adityanath on his 54th birthday

முதல்வர் யோகி ஆதித்யநாத். - கோப்புப்படம்

Published On :

லக்னௌ: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் 54-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி மற்றும் பல முக்கியத் தலைவர்கள் வெள்ளிக்கிழமை அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ராஜ்நாத் சிங் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்."

மேலும், அவரது தலைமையின் கீழ் மாநிலம் நல்லாட்சி, பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதற்காக முதல்வரைப் பாராட்டினார்.

"அவரது உறுதியான மன உறுதி மற்றும் அயராத முயற்சிகளால், உத்தரப் பிரதேசம் இன்று வளர்ச்சி மற்றும் செழிப்பின் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது," என்று கூறிய சிங், பொதுச் சேவையைத் தொடர அவருக்கு தேவையான ஆற்றல், நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கட்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

பாஜகவின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவரும், மத்திய நிதியியல் துறை இணையமைச்சருமான பங்கஜ் சௌத்ரியும் ஆதித்யநாத்திற்கு வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்க வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

"உத்தரப் பிரதேச முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான யோகி ஆதித்யநாத்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்க வாழ்த்துகிறேன் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌர்யா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோரும் முதல்வருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

மௌர்யா ஆதித்யநாத் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளும் கிடைக்கட்டும் எனவும், பதக் அவரது நல்வாழ்வுக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்தனர்.

Summary

Defence Minister Rajnath Singh, BSP president Mayawati and several other prominent leaders on Friday greeted Uttar Pradesh Chief Minister Yogi Adityanath on his 54th birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.