கலால் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் ஜூ12-ம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு, ஜூன் 2-ம் தேதி மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, திகார் சிறையில் இருந்து கடந்த ஜூன் 26ஆம் தேதி மத்திய புலனாய்வு துறை(சிபிஐ) கேஜரிவாலை கைது செய்தது.
ஜாமீன் கோரி கேஜரிவால் மனு
முன்னதாக, கேஜரிவால் சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை ஜூலை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த நிலையில், சிபிஐ கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், சிபிஐ காவலில் உள்ள கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில், காணொலி வாயிலாக இன்று சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் கேஜரிவால் ஆஜார்படுத்தப்பட்டார். கேஜரிவாலின் காவல் ஜூலை 12 வரை நீட்டித்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நகை வியாபாரியிடம் கொள்ளை முயற்சி: 4 போ் கைது

நீட் தோ்வா்களுக்கு இலவச பேருந்துப் பயணம்: கேஜரிவால் கருத்து

நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து: பஞ்சாப் அரசை காப்பியடித்த தில்லி; கேஜரிவால்

மதுபானக் கொள்கை வழக்கு: கேஜரிவால், சிசோடியாவுக்கு எதிரான சிபிஐ மனு ஜூலை 16இல் விசாரணை
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




