லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

புதுக் கதை! மனிதன் கடித்ததில் பாம்பு செத்தது!

ரயில்வே ஊழியர் ஒருவர் தன்னைக் கடித்த பாம்பை திருப்பி கடித்ததால் பரபரப்பு.

News image
- (கோப்புப்படம்)
Updated On :5 ஜூலை 2024, 7:08 am

DIN

பிகாரின் நவாடா மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில்வே ஊழியர், வாழ்வா சாவா போராத்தில் தன்னைக் கடித்த பாம்பை திருப்பி கடித்ததில் பாம்பு இறந்தது. அவ்வாறு செய்வது விஷத்தின் தன்மையை மாற்றும் என்பது உள்ளூர் கிராமப்புற மக்களிடம் நம்பிக்கையாக கருதப்படுகிறது.

பிகாரின் நவாடா மாவட்டத்தில் ராஜௌளி வனப்பகுதியில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 35 வயதான சந்தோஷ் லோஹரும், அவரது நண்பர்களும் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு அங்கு உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். அந்த வனப்பகுதியில் இருந்த பாம்பு ஒன்று சந்தோஷ் லோஹரை கடித்துள்ளது. பாம்பு கடித்தவுடனேயே வேகமாக செயல்பட்ட சந்தோஷ் லோஹர் அந்த பாம்பைப் பிடித்து இரண்டு முறை கடித்துள்ளார்.

கடித்தவுடனேயே அந்தப் பாம்பு பரிதாபமாக இறந்தது. அருகில் அவரது நண்பர்கள் சந்தோஷ் லோஹரை மீட்டு ராஜௌளி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்து சிகிச்சையளித்த மருத்துவர் சின்ஹா, அவர் நலமுடன் இருப்பதாக கூறினார்.

இந்த விநோத சம்பவத்தில் விஷமுள்ள பாம்பு கடித்தால், அதைத் திருப்பி கடிப்பதால் அந்த விஷம், பாம்பிற்கே திரும்பி போய்விடும் என்ற நம்பிக்கை கிராமப்புற மக்களிடம் இருப்பது வேடிக்கையாக இருந்தாலும், அவரின் விரைவான சிந்தனை அவரது உயிரைக் காப்பாற்றியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.