பிணைக் கைதிகளுக்கு கூகுள் லோகேஷன் பகிரும் நிபந்தனை கூடாது: உச்ச நீதிமன்றம்
கைதிகள் பிணையில் வெளியே வரும்போது கூகுள் லோகேஷன் பகிரும் நிபந்தனை விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு


கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து பிணையில் வெளியே வரும் கைதிகளிடம் கூகுள் லோகேஷனை பகிர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிணை பெற கூகுள் லோகேஷன் பகிரும் நிபந்தனையை காவல்துறையினர் விதிக்கக் கூடாது என்றும், ஒரு குற்றவாளியை இணையம் வாயிலாக தொடர்ந்து கண்காணிப்பது அவரது தனியுரிமையை பாதிக்கும் வகையில் அமையும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிணையில் விடுதலையாகும் குற்றவாளி ஒருவர், தனது கூகுள் மேப்ஸைப் பார்ப்பதற்கான செல்லிடப்பேசியின் பின் எண்ணை, விசாரணை அதிகாரிகயுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தர்விட்டுள்ளது.
ஜாமீன் வழங்கப்படுவதற்கான நோக்கத்தையே முறியடித்துவிடும் வகையில், ஜாமீன் நிபந்தனை விதிக்கப்படக் கூடாது. ஒரு குற்றவாளியை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில், நிபந்தனை இருக்கக் கூடாது, ஒரு குற்றவாளியின் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கும் வகையிலும் நிபந்தனை அமையக் கூடாது என்றும் நீதிபதி ஓகா வாய்மொழியாகப் பிறப்பித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
ஒரு வெளிநாட்டுக் குற்றவாளியாக இருப்பின், அவர் இந்தியாவை விட்டு வெளியே மாட்டார் என்று அவரது நாட்டு தூதரகம் உறுதி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையிலும் தளர்வு அளித்திருக்கும் நீதிமன்றம், ஒருவருக்கு பிணை வழங்குவதற்கான நோக்கத்தையே முறியடிக்கும் வகையில், ஜாமீன் நிபந்தனைகள் அமையக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார்.
போதைப் பொருள் வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஃபிராங் விடஸ் என்பவர் தொடர்ந்த இடைக்கால ஜாமீன் மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் பிணை பெற வேண்டுமானால், விசாரணை அதிகாரிகளிடம், தனது கூகுள் லோகேஷனை பகிர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது. குற்றவாளிகள் பிணை பெற கூகுள் லோகேஷனை பகிர்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இந்த நிபந்தனை அமைந்திருப்பதாகக் கூறி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மிக முக்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...