
புது தில்லி: பணியிடங்களில் பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
பணியிடங்களில், வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு குறித்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம் என்பதால் இதில் தலையிட விரும்பவில்லை. பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி கோரிக்கைகளை வைக்கலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது.
முன்னதாக, மாதவிடாய் காலத்தில் வேலை செய்யும், பெண்களுக்கு விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கினால், பணியிடங்களில் அவர்களை ஒதுக்கிட வழிவகுத்துவிடும். பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது என்று மாதவிடாய் கால விடுப்பு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது, மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாதவிடாய் விடுப்பு என்பது மத்திய அரசின் விவகாரம். எனவே சம்பந்தப்பட்ட மனுதாரர், பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி கோரிக்கை வைக்கலாம் என்று நீதிபதி அறிவுறுத்தியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.